சென்னையில் பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸார் குவிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீஸார் குவிக் கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சென்னையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று போராட் டம் நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணி யில் 12 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மட்டும் 2 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து செல்ல ஆங்காங்கே போலீஸார் வாகனங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆணையர்ஏ.கே.விஸ்வநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Comments