ஜம்முவில் சாலையில் வாகனம் கவிழ்ந்தது; மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 19 பேர் காயம்
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தது.
இந்நிலையில், சிலர் வாகனம் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறிய வாகன ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டினை இழந்துள்ளார். இதனை தொடர்ந்து சாலையின் நடுவில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் 19 பேர் காயமடைந்து உள்ளனர். பின் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



Comments
Post a Comment