பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது : மீண்டும் அதிரடியாக களமிறங்கும் கமல்ஹாசன்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
அண்மையில் இதன் டீசரை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் 15 பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கமல் கூறினார்.
முதல் சீசனை தொடர்ந்து மீண்டும் அவர் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். ஜுன் 16 முதல் ‘பிக் பாஸ் சீசன் 2’ ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
சென்னை – பூந்தமல்லியில் உள்ள அதே தனியார் ஸ்டுடியோவில் புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீட்டை நிர்மாணிக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம்.
முதல் சீசன் வீட்டை விட இரண்டாவது சீசன் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.



Comments
Post a Comment