முடங்கியது முத்துநகர்

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நேற்று காலை போராட்டக்காரர்கள் திரண்டிருந்த பகுதியில் இருந்து போலீஸாரை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் தீப்பிடித்து எரிந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தூத்துக்குடியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்கள் புறநகர்ப் பகுதியான புதுக்கோட்டை வரையே இயக்கப்படுகின்றன. உள்ளூரிலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை நேற்று 2-வது நாளாக வெறிச்சோடிக் கிடந்தது.
தூத்துக்குடியில் 2-வது நாளாக நேற்றும் கலவரம் வெடித்ததால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடியது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்டவர்களிடம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கூறி கலைந்து போகுமாறு கூறிய போலீஸாரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு நடைபெற்று, ஒருவர் பலியான அண்ணா நகரில் அணிவகுப்பு நடத்திய போலீஸார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வெளியே நேற்று காலை திரண்டிருந்தவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீஸார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்து விரட்டியடிக்கும் போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட 2 பேர்.
தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று 2-வது நாளாக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த ஒருவரை அரசு மருத்துவமனைக்கு தனது வாகனத்தில் தூக்கிச் செல்ல உதவும் மாற்றுத்திறனாளி.
தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று 2-வது நாளாக போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போது காயமடைந்த 2 பேரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வழிவிடுமாறு சத்தமாக கூறிக்கொண்டே வேகமாகச சென்ற இளைஞர்.


Comments