சில்மிஷம் செய்தவருக்கு சுஷ்மிதா கொடுத்த தண்டனை இதுதான்!!



கூட்ட நெரிசலில் தன்னிடம் சில்மிஷம் செய்த சிறுவனை அழைத்து அறிவுரை கூறி மன்னித்து அனுப்பியுள்ளார் நடிகை . 

முன்னணி நடிகைகள் பலருக்கும் அவரைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக அவரது பாதுகாவலர்கள் இருப்பார்கள். அப்படி இருந்தும் பிரபல நடிகை சுஷ்மிதாவிடம் 15 வயது சிறுவன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுஷ்மிதா சென் விருதுவழங்கும் விழா ஒன்றுக்கு சென்று இருந்தார். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இவரிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை கையும், களவுமாக சுஷ்மிதா பிடித்துள்ளார். பார்த்தால் சில்மிஷம் செய்தவருக்கு வயது 15 தான். இதனால், சுஷ்மிதா அதிர்ச்சி அடைந்தார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சுஷ்மிதா கூறுகையில், ‘’இது பற்றி நான் போலீசில் புகார் அளித்திருந்தால் அவன் வாழ்க்கை பாழாகி இருக்கும். அதனால் அவனை அழைத்து சென்று அட்வைஸ் செய்தேன். பின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். இது தவறு என்று கூட அவனுக்கு யாரும் சொல்லித் தராமல் இருந்தது தான் எனக்கு வருத்தமாக இருந்தது’’என்றார்.

Comments