'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய வாலிபர்
பிரான்ஸ் நாட்டின் பாரிசில் மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா (வயது 22) . அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.
ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.
இது குறித்து வாலிபர் கூறியதாவது; அது ஒரு குழந்தை என்பதால் நான் செய்தேன். நான் ஏறினேன்... கடவுள் அவருக்கு நன்றி சொன்னேன். "
கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளார்.



Comments
Post a Comment