பல இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
மதுரையில் பழங்காநத்தம், செனாய் நகர், பூ மார்க்கெட், தெற்குவாசல் ஆகிய 4 இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியதில் 4 அரசு பேருந்துகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரியின் நாகர்கோவிலில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் 2 பேருந்துகள் சேதமடைந்தன.
பாளையங்கோட்டையில் நடந்த கல்வீச்சுத் தாக்குதலிலும் 2 பேருந்துகள் சேதமடைந்துள்ளன.



Comments
Post a Comment